(FASTNEWS| COLOMBO) – இலங்கை அணி மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கடந்த 17ம் திகதி இடம்பெற்ற போட்டியின் பிறகு சர்வதேச கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் கட்டாய ஊடக சந்திப்பில் பங்கேற்காது இலங்கை அணியானது அதனை புறக்கணித்துள்ளது.
அதன்படி, அணியின் எந்தவொரு வீரரோ அல்லது பயிற்சியாளரோ குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
அதனை காரணம் காட்டி ஏதாவது தடை அல்லது தண்டம் விதிக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.