இலங்.புதிய அரசுடன் சேர்ந்து செயற்பட கனடா விருப்பம்

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் கனடா அரசு அறிவித்துள்ளது.

கனடாவிற்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகர் அஹமட் ஜவாட், கனேடிய ஆளுனர் நாயகம் டேவிட் ஜொன்ஸ்டனை நேற்று சந்தித்த போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் உட்பட இலங்கையின் தற்போதைய வளர்ச்சி குறித்து உயர்ஸ்தானிகர் ஜவாட், கனேடிய ஆளுனர் நாயகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்னும், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கியுள்ள உலகம் முழுவதும் வாழும் இலங்கை வாழ் புலம்பெயர்ந்தோருடன் இணக்கப்பாடுகள் உள்ளதாக அவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வரலாற்று ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையில் மிகச் சிறந்த உறவு காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

(riz)