இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் ஆணைக்குழுவிற்கு புதிதாக 300 பேர் இணைப்பு

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் ஆணைக்குழுவிற்கு 300 பேர் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு புதிதாக 300 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

100 பேரை இணைத்துக் கொள்வதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் 100 பேருக்கு நேர்முகத்தேர்வு நடாத்தி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் ஆணைக்குழுவின் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு 100 உத்தியோகத்தர்களின் சேவை போதுமானதல்ல எனவும் இதனால் மேலும் 200 பேரை சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.