முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் தற்போதைய இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்ய இன்று(23) நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 , 6 ஆகிய இரு தினங்களில விசாரணைக்கு எடுத்து கொள்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார இன்று(23) உத்தரவிட்டுளார்.
கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதால் 10 இலட்சம் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும் அவர் சட்டத்தரணி ஊடாக மருத்துவ அறிக்கை ஒன்றை முன்வைத்து, சுகயீனம் காரணமாக தான் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.