இலண்டன் சுரங்க ரயிலில் நேற்று(15) காலை நடந்த குண்டு வெடிப்பினை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இலண்டன் நகரின் சில பகுதிகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் செல்லும் சுரங்க ரயில் (Tube Train) சேவை இயங்கி வருகிறது. நேற்று(15) காலை வழக்கம் போல் இந்த ரயிலில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். (உள்ளூர் நேரப்படி) காலை 8.20 மணியளவில் பார்சன்ஸ் கிரீன் நிலையத்தை நெருங்கிய போது ரயிலின் ஒரு பெட்டியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்து சிதறியது.
குறித்த இந்த சம்பவத்தில் சுமார் 29 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியது. பெருநகர இலண்டன் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
(rizmira)