இலண்டன் தாக்குதல் மிலேச்சத்தனமான தாக்குதல் – ஜனாதிபதி கண்டனம்..

இலண்டனில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு அரசாங்கம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

குறித்த இந்த தாக்குதல் மிலேச்சத்தனமான தாக்குதல் எனவும், இலண்டன் மக்களுக்காக வருந்துவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)