இலத்திரனியல் வாகன வருமான வரி அனுமதிப் பத்திரம் இணைய ஊடாக பெற வசதி.

வடமாகாண மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இலத்திரனியல் வாகன வருமான வரி அனுமதிப் பத்திரத்தினை இணையத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளும் வகையில் இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.gov.lk எனும் முகவரியின் ஊடாக அதன் அறிவுறுத்தல்களைப் பின்பற்றிப் பெற்றுக் கொள்ளமுடியும் என்றும் இதன் மூலம் 14 நாட்கள் வலிதான தற்காலிக வாகன வரி அனுமதிப் பத்திரத்தினைப் பெற்றுக் கொள்ளமுடிவதுடன் வடமாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வாகனம் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு மூலப் பிரதி 14 நாட்களுக்குள் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்படும் என வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அறிவுறுத்தியுள்ளார்.

 

(rizmira)