இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு நாம் தயார் – நெவில் பெர்னாண்டோ..

இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு தமது வைத்தியசாலை தயார் என மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரச வைத்தியசாலைகளில் போராட்டங்கள் நடத்தப்படும் இன்று, தமது நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் இலவசமாக மக்களுக்கு சிகிச்சை வழங்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

சில மருத்துவர்கள் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மிகப் பெரிய பிரச்சினையாக கருதுகின்றனர். நாட்டுக்கு மக்களுக்கு இன்று மாலபே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினையாக காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு அப்பாவி நோயாளிகளை நெருக்கடியில் ஆழ்த்துவது மாபெரும் பாவ காரியமாகும். இவ்வாறு பாதிக்கப்படும் அப்பாவி நோயாளிகளுக்கு நான் உதவ முன்வருகின்றேன்.

எனது வைத்தியசாலை 24 மணித்தியாலங்களும் திறந்தே இருக்கும் என டொக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பை வெளியிட்டு இன்று(05) நாட்டின் சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் மருத்துவர்கள் உட்பட 121 தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)