அரசினால் இலவசமாக வழங்கப்படுகின்ற பாடப் புத்தகங்களை விலைக்கு விற்க கல்வி அமைச்சு முயற்சிப்பதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வி வெளியீட்டு ஆணையாளர் அம்.எம்.கே.பி. இயங்கசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில்;
பல்வேறு தரப்பினர் தங்களது சுய அரசியல் இலாபம் கருதி, இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் மாத்திரம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி, பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அரச அச்சகத்தில் நிலவிய அதிக தொழிற்பளுவின் காரணமாக, சில புத்தகங்களை அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பெரும்பாலான பாடப் புத்தகங்கள் கல்வி அமைச்சின் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தங்களின் பிள்ளைகளுக்கு போதுமான அளவு பாடப் புத்தகங்கள் கிடைக்கப்பெறவில்லை என பெற்றோர் பலர் குற்றம் சுமத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
#reeshmaa…