இசை என்பது உலக மொழிகளைப் போன்றதொன்று. யாராகயிருந்தாலும் தன்பக்கம் ஈர்க்கும் தன்மையைக் கொண்டது. ஆனால், அதே இசையினால் உயிருக்கே அச்சுறுத்தல் என்றால், அன்றைய நாளே அந்த பாடகரின் நிம்மதி இல்லாமல் போய்விடுகின்றது.
இதுவும் அவ்வாறனதொரு துரதிருஷ்டவசமான கதையொன்றே,
மிர்னா ஹெனா The Voice of Kids போட்டியில் பங்கேற்றாள். அவளது வயது 11.
குறித்த போட்டியில் அவள் பாடியது Frozen திரைப்படத்தில் மிகவும் பிரசித்தமான பாடலான Let it go.. எனப்படும் பாடலே ஆகும். அதன் பிற்பாடு உலகிலேயே பிரசித்தமாகினாள்.
உங்களுக்கு தெரியுமா குறித்த போட்டியில் அவள் பாடிய வீடியோ You Tube இனூடாக 19,853,497 பேர் பார்வையிட்டுள்ளனர்.
குறித்த பாடலிற்குப் பின்பு “பபிலோன் பிரின்சஸ்” எனும் செல்லப் பெயரினால் மக்கள் அவளை அழைக்கத்தொடங்கினர்.
இப்போட்டி முடிவில் மிர்னா நடுவர் இடம் கூறுகையில்;
“எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனது உயிரினைக் குடிக்க ISIS தீவிரவாதிகள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். எனக்கு இரவில் பெரும் பயமாகியுள்ளது. எனக்கு தூங்குவதற்குக் கூட பயமாயுள்ளது” என தெரிவித்துள்ளாள்.
அவளது தந்தை கூறுகையில்;
நாம் லெபனானில் வசித்து வந்தோம். அங்கிருந்து ஈராக்கிற்கு வந்தது மகளின் மரண அச்சுறுத்தலுக்கு பயந்தே ஆகும். ISIS கூட்டத்தினர் இளம் மிர்னாவை கொள்ள திட்டமிடுகின்றனர். எனவும் தெரிவித்தார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=77xBgxvi4bk” width=”560″ height=”315″]