இளம் பட்டதாரிகளுக்கு உயர்ந்த பட்சம் 15 இலட்சம் ரூபா நிதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம்..

இளம் பட்டதாரிகள் 40 பேருக்கு வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பவற்றினால் உயர்ந்த பட்சம் 15 இலட்சம் ரூபா நிதியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வரவு செலவுத் திட்ட யோசனையின் அடிப்படையில் அமுல்படுத்தப்படும் குறித்த இந்த கடன் முறைமைக்கு 80 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதில் 40 வர்த்தக திட்டங்களுக்கான நிதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)