கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கிய இப்படம் சித்திரைப் புத்தாண்டையொட்டி கடந்த 14 ஆம் திகதி உலகெங்கும் சுமார் 1200 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் நாளில் உலகளாவிய ரீதியில் 28.96 கோடி இந்திய ரூபாவை இப்படம் வசூலித்துள்ளது. இதன் மூலம் விஜய் நடித்த “கத்தி” படத்தின் உலகளாவிய முதல்நாள் வசூல் சாதனை (26 கோடி ரூபா) முறியடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் 420 திரையரங்குகளில் வெளியான தெறி படம் முதல் நாளில் 13.1 கோடி இந்திய ரூபாவை வசூலித்துள்ளது. விஜய் நடித்த திரைப்படமொன்று தமிழகத்தில் பெற்ற ஆகக்கூடுதலான முதல்நாள் வசூல் இதுவாகும். இதற்குமுன் விஜய் நடித்த படங்களில் “கத்தி” 12.5 கோடி ரூபாவை வசூலித்திருந்தது. எனினும், தமிழகத்தில் அஜித்தின் வேதாளம் படைத்த 15.1 கோடி ரூபா முதல் நாள் வசூல் சாதனையை “தெறி” முறியடிக்கத் தவறியுள்ளது. எனினும், பணப் பிரச்சினைகள் காரணமாக செங்கல்பட்டில் சுமார் 60 திரையரங்குகளில் கத்தி வெளியிடப்படாத நிலையிலேயே 13.1 கோடி ரூபாவை தெறி வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளைய தளபதி விஜய், சமந்தா, எமி ஜக்ஸன் நடித்த “தெறி” படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது