இளைய தளபதியின் மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் வரவுள்ள பிரபல பாலிவுட் நடிகர் இவருதானுங்க…

தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய்யின் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல. அப்படி ரீமேக் செய்யப்பட்ட பல படங்கள் அங்கேயும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கியிருக்கிறது.

உதாரணமாக விஜய்யின் கத்தி படம் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க கைதி எண் 150 என்று பெயரில் வெளியாகி மாஸ் வசூலை ஈட்டியது.

இந்நிலையில் கத்தி படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வருகின்றன. முதலில் விஜய் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் பெயர் வந்தது. ஆனால் தற்போது வந்த தகவல்படி ஹிருத்திக் ரோஷன் நடிப்பார் என கூறுகின்றனர்.