இழுத்தடிக்கும் CCD

கடந்த வருடம் ஜுன் நடுப்பகுதியில் அளுத்கம பிரதேசத்தில் பொது பல சேனா பயங்கரவாதிகளின் தூண்டுதலில் கட்டவிழத்துவிடப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் இன்று களுத்துறை நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், வழக்கம் போன்று குற்றப்பிரிவினர் (CCD) நீதிமன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் மீண்டும் வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய வழக்கில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் சந்தேக நபர்களின் பெயர்களும் அடையாளங்களும் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும் CCDயினர் வருகை தராமையும் இதனையடுத்து நிர்வாகப் பணிப்பாளர் அடுத்த தவணையில் ஆஜராக வேண்டும் எனும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் தரப்பில் ஆஜரான RRT சட்டத்தரணிகள் தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லையென தெரிவித்துள்ளனர்.