கடந்த 2 ஆண்டுகளில் தங்கத்தில் முதலீடு செய்வது 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டொலருக்கு அடுத்த படியாக, பொது சர்வதேச மாற்று நாணயமாக தங்கம் கருதப்படுகின்றது. எனவே, உலக நாடுகள் தங்கள் கையிருப்பில் குறிப்பிட்ட ஒரு பகுதியை தங்கமாக வைத்திருப்பதை பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
உலக நாடுகளின் ஒட்டுமொத்த தங்க வர்த்தகத்தில் 40 சதவீதம், ஆசிய நாடுகளில் மட்டுமே இடம்பெறுகின்றது. இதில் சீனா மற்றும் இந்தியாவிலேயே தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தில் முதலீடு செய்வது 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகின்றது.
இதனடிப்படையில் தங்கத்தின் விலையானது 1,307 டொலர்களைக் காட்டிலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.