இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அந்நாட்டுக்கான புதிய இந்திய தூதராக டாக்டர் ரோன் மால்காவை நியமனம் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் நாட்டுக்கான இந்திய தூதராக இருந்து வருபவர் டேனியல் கார்மனின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்ததையடுத்து, புதிய இந்திய தூதரை நியமிக்கும் பணிகளில் பிரதமர் நேதன்யாகு ஈடுபட்டு வந்தார்.
அதன்படி, சட்ட கல்லூரியின் மூத்த பேராசிரியரும், வங்கி துறையில் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவருமான டாக்டர் ரோன் மால்கா என்பவரை அந்நாட்டுக்கான இந்திய தூதராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.