ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜோர்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இவ்வாறு அங்கீகரிப்பது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனிடம், ஜோர்டனின் அமைச்சர் அய்மான் சபாதி தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் வகையில் வெகு விரைவில் ஜெரூஸலம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்னும் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று டொனால்ட் டிரம்ப்பின் முக்கிய ஆலோசகரும் அவரது மருமகனுமான ஜெயார்ட் குஷ்னர் தெரிவித்துள்ளார்.