இஸ்லாமிய அடிப்படைவாதம்; எதிரான நடவடிக்கைகள் தொடரும் ­​- பொலிஸ்

(FASTNEWS|COLOMBO) -அவசரகால சட்டம் நீக்கப்பட்டாலும் தடை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய அடிப்படை வாதத்தை போதிக்கும் மூன்று அமைப்புகளின் தடை நீக்கப்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், 21 திகதி நடத்தப்பட்ட தாக்குலகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும், தற்போது பயங்கரவாத பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்­களின் விளக்கமறியலுக்கும் மற்றும் அவர்களின் சொத்துகளை தடைசெய்வதற்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

21 ஆம் திகதி இடம்பெற்ற பய்கரவாத தாக்குதலின் பின்னர் கடந்த மே மாதம் 13ஆம் திகதி தேசிய தௌஹீத் ஜமாஅத் , ஜமா­அத்தே மில்லாது இப்ராஹிம் மற்றும் விலயா அஸ் செய்லானி எனப்படும் மூன்று அடிப்படைவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.