சுவிட்சர்லாந்து நாட்டின் டிசினோ மாகாணத்தில் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தடையை மீறி பர்தா அணிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இது குறித்த சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டிசினோ மாகாணத்தின் பொது இடங்களில் பர்தா உடை அணிந்து வரும் பெண்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஆறரை லட்சம் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை சட்டம் சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.