(FASTNEWS|COLOMBO) – இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் சிலர் சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் தொடர்ந்தும் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் இந்த போராட்டம் நேற்று(10) முதல் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.