இ.போ. சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

(FASTNEWS|COLOMBO) – தேசிய சேவை சங்கத்துடன் இணைந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் காரியாலயத்தில் இன்று(13) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக வழங்கிய இணக்கப்பாட்டுக்கு அமைய பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்ய தீர்மானித்ததாக தேசிய சேவை சங்கத்தின் உப செயலாளர் சுனில் டி சில்வா, தெரிவித்துள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளுக்கு அமைய சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தேசிய சேவை சங்கத்தின் இலங்கை போக்குவரத்து சேவை ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.