இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களினதும் கட்டணங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அதிகரிக்க இருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
நேற்றைய தினம் கண்டியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தை 6 சதவீதம் அதிகரிக்க இருப்பதாகவும் அதாவது 8 ரூபாவில் இருந்து 9ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைகளை தனியார் மயப்படுத்த அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது 20 ஆயிரத்து 700 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.
எனவே இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைகளை தனியார் மயப்படுத்துவதற்கு எந்த தேவையும் இல்லைஎனவும் அவர் கூறினார்.
அத்துடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைகளில் 36 ஆயிரத்து 700பணியாளர்கள் பாதுகாப்பாக பணி புரிகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.