இ.போ.ச மற்றும் புகையிரத போக்குவரத்து வழமைக்கு…

(FASTNEWS|COLOMBO) நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் பயணிக்கக்கூடிய வகையில் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை, இன்று காலை 6.00 மணி முதல் புகையிரத சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.