ஈக்வடோரில் மற்றுமொரு 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஈக்வடோரில் 6.0 ரிக்டர் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தின் உயிர்ச்சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கடந்த 16 ஆம் திகதி அங்கு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 500ற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் அங்கு இடம்பெற்று வரும் நிலையில், மீண்டுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.