தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஈராக்கின் முன்னாள் அழகு ராணியான ஷைமா காசீம் (Shaima Qassim) தெரிவித்துள்ளார்.
ஷைமா காசீம் 2015ம் ஆண்டு எகிப்து அழகு ராணியாக பதக்கம் வென்றவராவார்.
தனக்கு சமூக வலைதளங்கள் ஊடாகவும் தொலைபேசி ஊடாகவும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் டாரா பரேஸ் (Tara faress) எனும் எகிப்து மொடல் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார். அதற்கு முன்னர் எகிப்து மனித உரிமை நடவடிக்கையாளர் சௌத் அல் அலீ, பஸ்ரா தலைநகரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
