ஈரானில் மீண்டும் நிலநடுக்கம் – 20 பேர் காயம்…

ஈரான் நாட்டில் இன்று(13) அதிகாலை 6.0 ரிகடர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெர்மன் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 என்ற அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சுமார் 57 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தால் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், மேலும், 18 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. அந்த மாகாணத்தில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.