ஈரானை எதிர்க்கவும், சிரிய விவகாரத்திலும் இஸ்ரேலுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு – அமெரிக்கா..

ஈரானை எதிர்க்கவும், சிரிய விவகாரத்திலும் இஸ்ரேலுக்கு ஒத்துழைக்கவும் தாம் தயாராகவிருப்பதாக. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. சிரியா தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லாத போதிலும், ட்ரம்ப் நிர்வாகம் இஸ்ரேலுடன் இணைந்து செயற்படும்.

ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு எதிரான எமது பிரசாரம் தொடரும். அத்துடன், ஈரானிய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் எமது முயற்சிகளும் தொடரும்.

இதேவேளை, மத்திய கிழக்கின் ஸ்தீரத்தன்மையை பேணுவதற்கும், இஸ்ரேலை பாதுகாப்பதற்குமான எமது முயற்சிகள் தொடர்ந்து இடம்பெறும்” எனத் தெரிவித்தார்.