(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர்ப் பதற்ற நிலை ஒன்று உருவாகும் நிலைமை அண்மையில் உருவாகியிருந்தது.
அது, ஈரானின் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியினை அமெரிக்கா படை ஆளில்லா விமானம் மூலம் கொலை செய்தமையினாலேயே ஆகும்.
நிலைமை இவ்வாறு இருக்க உலக நாடுகள் மிகவும் அச்சத்தில் இருந்தது தான் ‘மூன்றாவது உலக மகா யுத்தம்’ இதனால் ஆரம்பிக்கப்படும் என்றே ஆகும்.
அவ்வாறானதொரு பின்னணியிலேயே அமெரிக்கா மற்றும் ஈரான் சவால்களை விடுத்திருந்தது. மத்திய கிழக்கு நாடுகளும் இதற்கு ஆயத்தமாகி இருந்தது என்றும் கூறலாம்.
எனினும், இவை அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடி சமரசத்திற்கு வந்திருந்தனர்.
இதற்கிடையே, இவற்றுக்கு உறுதுணையாக இருந்தது இலங்கையின் சிறு பிள்ளை ஒன்றின் கடிதம் என பரவலாக பேசப்படுகின்றது. குறித்த கடிதமானது மின்னஞ்சல் ஊடாக அமெரிக்கா மற்றும் ஈரான் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீடியோ;