ஈரான் – ஈராக் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 7,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
7.3 புள்ளியாக பதிவான இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்ததுடன் நிலநடுக்கத்தின்போது உண்டான அதிர்வலைகள் மத்திய தரைக்கடல் பகுதியிலும், ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பிற்குள்ளான பகுதியில் அமைந்துள்ள 2 வைத்தியசாலைகளும் முற்றாக சேதம் அடைந்ததால் நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரானில் 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 26,000 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.