ஈரான் தலைநகரில் நிலநடுக்கம்…

ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் நேற்றிரவு(20) நில அதிர்வு உணரப்பட்டது. 5.2 ரிக்டர் என்ற அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

டெஹ்ரானில் இருந்து மேற்கு திசையில் சுமார் 40 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ. ஆழத்திலும் இந்நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.