உங்களுக்கு நினைவிருக்கா? தசூன் சானக்க தொடர்பில் மலிங்க கூறும் குட்டிக் கதை [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குமாறு 2013 ஆண்டே தாம் தெரிவித்ததாக லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்கு செல்ல முன்னர் இலங்கை அணி நடாத்திய ஊடக சந்திப்பின் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், “சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் அணியில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குமாறு கூறினோன் அப்போது எனது தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் சில வீரர்களை அணியில் இருந்து வெளியேற்றுவதாக கூறினர்.

அக் காலப்பகுதியில் தான் தசூன் சானக்க, செஹான் ஜெயசூரிய போன்ற வீரர்கள் இருபதுக்கு 20 கிரிக்கெட் ஆரம்பித்தனர். நான் ஆறுவருடங்களுக்கு முன்னர் நான் தெரிவித்த விடங்களை தற்போது தான் நீங்கள் தெரிவிக்கின்றீர்கள்? தற்போதாவது புரிந்து கொண்டுள்ளீர்கள் அதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

தற்போது இலங்கை அணி இளம் வீரர்கள் நன்றாக செயற்படுவதாகவும் என்னைவிட சிறந்த வீரர்கள் உள்ளதாக நீங்கள் தீர்மானித்து உள்ளீர்கள்.

தற்போது நல்ல குணமுடைய, சிறந்த தலைவர் கிடைத்துள்ளதாக இணையங்களில் பார்க்க முடிகின்றது. இது சிறந்த விடயமாகும்.

இவ்வாறான ஒரு அணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் சந்தோஷப்படுகிறேன்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.