அழுக்கடைந்த கண்ணாடிகளை நீங்கள் என்ன தான் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு தேய்த்து கழுவினாலும் உங்களால் ஒன்னும் செய்ய இயலாது. இதனால் உங்கள் கண்ணாடியில் கீரல்கள் மற்றும் நிறம் மாறுமே தவிர புதிது போல் ஜொலிக்காது.
எனவே உங்கள் கண்ணாடிகளை புதிது போல் ஜொலிக்க வைக்க சரியான பொருள் தேவைப்படுகிறது
பேக்கிங் சோடா:
உங்கள் கண்ணாடியை பளபளப்பாக மாற்ற பேக்கிங் சோடா மிகவும் பயன்படுகிறது. கொஞ்சம் பேக்கிங் சோடவை கண்ணாடியில் அழுக்கு உள்ள இடத்தில் தடவி துணியை கொண்டு தேய்க்க வேண்டும். பிறகு ஒரு சுத்தமான துணியை கொண்டு துடைக்க வேண்டும். பிறகு தண்ணீர் கொண்டு துடைக்கவும். இறுதியில் ஒரு துண்டை கொண்டு துடைத்தால் ஜொலி ஜொலிக்கும் கண்ணாடியை பெறலாம்.
டிஸ்டில்டு வாட்டர்:
நாம் சாதாரண மற்றும் வடிகட்டிய தண்ணீரை பயன்படுத்தும் போது அதில் மினரல்கள் இல்லாததால் உங்கள் கண்ணாடி அந்த அளவுக்கு சுத்தமாவதில்லை. எனவே இதற்கு பதிலாக டிஸ்டில்டு வாட்டரை பயன்படுத்தலாம். எப்பொழுதும் போல் க்ளீனரை டிஸ்டில்டு வாட்டருடன் சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
வினிகர்:
மற்றொரு கண்ணாடி க்ளீனர் வொயிட் வினிகர் அல்லது டிஸ்டில்டு வினிகரை பயன்படுத்தலாம். இதற்கு வினிகரை தண்ணீருடன் கலந்து ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கண்ணாடியை துடைத்தால் கண்ணாடியில் தேங்கியுள்ள அழுக்கு, கறைகள் எல்லாம் போய் பளிச்சென்று மாறிவிடும்.
ஷேவிங் க்ரீம்:
உங்கள் பாத்ரூம் கண்ணாடியை துடைப்பதற்கு இந்த முறை கண்டிப்பாக பலனளிக்கும். நீங்கள் குளிக்க போவதற்கு முன் ஷேவிங் க்ரீம் நுரையை உங்கள் கண்ணாடியில் தடவி விட்டு செல்லுங்கள். பிறகு மென்மையான துணியை கொண்டு துடைக்கவும்.இப்படி செய்தால் ஷேவிங் க்ரீம் ஒரு படலமாக செயல்பட்டு நீண்ட நாட்களுக்கு உங்கள் கண்ணாடி பளபளக்கும். இதே முறையை உங்கள் கார் கண்ணாடிகளுக்கும் பயன்படுத்தலாம்
செய்தி தாள்கள்:
இந்த முறை செலவு குறைந்த எளிதான முறையாகும். கொஞ்சம் நியூஸ் பேப்பர்களை கொண்டே உங்கள் கண்ணாடியை புதிதாக மாற்றி விடலாம். நியூஸ் பேப்பரை பந்து போல் சுருட்டி கொண்டு தண்ணீரில் முக்கி கண்ணாடியில் தேய்க்கவும். இதில் வினிகர் மற்றும் தண்ணீர் கலவை கூட பயன்படுத்தலாம். இதனால் செலவில்லாத புதிய கண்ணாடியை பெற முடியும். ஆனால் இதை செய்வதற்கு முன்னாடி பேப்பரின் தரத்தை சோதித்து கொள்ளவும். எதாவது மை கறை பட வாய்ப்புள்ளதா என்பதையும் பார்த்து கொள்ளவும்.