பிரசன்ன விதானகேயின் “உசாவிய நிஹண்டாய்” திரைப்படத்தின் தடையுத்தரவு தளர்க்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவினை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி எம்.யு. குணவர்தன பிறப்பித்துள்ளார்.
அத்துடன், குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த திரைப்படம் தன்னை அவமானப்படுத்துவதாக தெரிவித்து, முன்னாள் நீதவான் லெனின் ரத்னாயக்க நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.