மனித உயிர்கள் எப்படி உலகில் தோன்றியதோ, அந்த மனித உயிர்களைக் காக்கத் தான் பழங்களும், காய்கறிகளும் தோற்றுவிக்கப்பட்டன.
அப்படி மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஓர் அற்புத பழம் தான் எலுமிச்சை.
இந்த எலுமிச்சையின் மருத்துவ குணங்களைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை.
எலுமிச்சை ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகள் கிட்டும். குறிப்பாக உடலைத் தாக்கும் நோய்களின் அளவு குறையும். அதிலும் இந்த எலுமிச்சை ஜூஸை உடற்பயிற்சி செய்யும் போது குடித்து வந்தால் மிகவும் நல்லது.
இங்கு எலுமிச்சை ஜூஸை எப்போது குடிப்பது சிறந்தது, அப்படி குடித்தால் என்ன நன்மைகள் கிட்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
* எலுமிச்சை ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள டாக்ஸினை வெளியேற்றும் பண்பால், செரிமான மண்டலம் மற்றும் இரத்தம் சுத்தம் செய்யப்படும்.
*எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, உடலுறுப்புக்களின் செயல்பாடுகளை வலுவாக்கும்.
*எலுமிச்சை ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், புற்றுநோய், இரத்த அழுத்தம், சிறுநீரக பாதை பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபடலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
*எலுமிச்சை சாற்றினை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். ஆனால் நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வருபவராயின், எலுமிச்சை ஜூஸை வேறு விதமாகத் தான் பருக வேண்டும்.