உடல் எடையினை குறைக்க சிறந்த வழி தயிர்..

தயிரை பிடிக்காதவர்கள் மிகக் குறைவு. கடும்பசிக்கு கூட வெறும் தயிர் சாதமும், ஊறுகாயும் இருந்தாலே போதுமானது. வயிறு நிறைந்துபோல் உணர்வு தோன்றும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு தயிர் சாதமாகத்தான் இருக்கும். ருசிக்கு குறைந்தது அல்ல அதன் சத்துக்கள். ஜீரணத்திற்கு அதிகப்படுத்தும்.

அதிக அளவு கால்சியம் கொண்டுள்ளது. எலும்பு பலத்திற்கு நல்லது. அதோடு ஒரு புதிய ஆராய்ச்சியில் தயிரை சாப்பிடுவதால், மார்பக புற்று நோய் வராது என கண்டுபிடித்துள்ளனர்.

உடல் எடையை குறைக்கலாம் :

நமது உடலில் சுரக்கும் கார்டிசால் என்ற ஹார்மோன் சம நிலை இல்லையென்றால், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக கொழுப்பு ஆகிய பாதிப்புகள் உண்டாகும். தயிர், கார்டிசால் சுரப்பை தூண்டி, சம நிலையில் வைக்க உதவுகிறது. இதனால் உடல் எடை குறையும்.

மன அழுத்தத்தை குறைக்கும் :

தயிர் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது. நரம்புகளில் ஏற்படும், இறுக்கத்தை தளர்த்தி, புத்துணர்வோடு இருக்கச் செய்கிறது. மூளையின் செயல்களை தூண்டுகிறது.