உடல் எடையை விரைவாக குறைக்க இந்த பழங்களை சாப்பிடுங்க!

உடல் எடையை குறைப்பது தான் இன்றைக்கு பலரது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவாக இருக்க வேண்டும்.
உடல் எடையை குறைக்க நீங்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

உண்ணும் முறை :
காலை உணவோ மதிய உணவோ அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிட்டாலும் சரி, உணவை நன்றாக மென்று கூழாக்கி சாப்பிடுங்கள். அவசர அவசரமாக முழுங்கவே கூடாது. நிதானமாக மென்று சாப்பிட்டால் தான் உணவில் இருக்கும் சத்துக்கள் நம்மால் கிரகத்துக் கொள்ள முடியும். அதே போல வேறு சிந்தனையுடனோ அல்லது அதிக கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகளுடன் சாப்பிடச் செல்லாதீர்கள். இது கட்டுப்பாட்டை மீறி அதிகளவில் சாப்பிட வைக்கும்.

அவகோடா :
அவகோடா பழத்தில் நல்ல கொழுப்பு அதிகமிருக்கிறது. இதில் அதிகளவு தண்ணீர் சத்தும் ஒலிக் அமிலமும் கலந்திருக்கிறது இதனை எடுத்துக் கொள்வதால் நம் உடலில் டெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் சுரக்க உதவிடும். இந்த ஹார்மோன் கொழுப்பை கரைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது

பேரிக்காய் :
பேரிக்காய் எடுத்துக் கொண்டால் செரிமானத்தை சீராக்கும். அதோடு மலச்சிக்கல் மற்றும் பசியின்மைக்கு தீர்வாக அமைந்திடுகிறது. சரியாக உணவு சாப்பிட முடியவில்லை என்று ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்வது குறையும் அதே சமயம் ஜீரணமாகாத உணவு வகைகளினால் தான் உடல் எடை அதிகரிக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி :
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் லெப்டின் மற்றும் அடிபோநிக்டின் என்ற ஹார்மோனை அதிகரிக்கிறது. இவை அதிகமாக சுரப்பதால் நம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துவதோடு கொழுப்பினை கரைக்க உதவுகிறது. அதோடு ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி என்சைம் உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப்பங்காற்றுகிறது.

மாதுளம் பழம் :
மாதுளம் பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிடும். அதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பினையும் நீக்க உதவுகிறது. மாலையில் சிற்றுண்டியில் மாதுளம் பழம் சேர்த்துக் கொள்ளலாம்.