உடவளவை நீர்த்தேக்க பகுதியில் கடும்மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு(07) குறித்த நீர்த்தேக்கத்தின் 3 கதவுகள் ஒன்றரை அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளதாக செயற்பாட்டு பொறியியலாளர் சுஜீவ குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வளவ கங்கையை அண்மித்துள்ள மக்கள் நதி நீர் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.