உடுவே தம்மாலோக்க தேரரை அச்சுறுத்திய நபர் கைது..

நீதிமன்ற வளாகத்தினுள் உடுவே தம்மாலோக்க தேரரை அச்சுறுத்திய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்ட காவற்துறையால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி குறித்த இந்த அச்சுறுத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பின்னர் இன்று(03) உடுவே தம்மாலோக்க தேரர் நீதிமன்றத்திற்கு வந்த போது, சந்தேக நபர் நீதிமன்ற வளாகத்தில் இருந்ததை கண்ட அவர் இது தொடர்பில் காவற்துறைக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

(rizmira)