ஒலிபெருக்கி உபகரணங்களை பயன்படுத்தி ஒலி மாசு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க, இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கின் பிரதிவாதிகளின் சட்ட மற்றும் அடிப்படை எதிர்ப்பினை தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கியினால் வெளியாகும் சத்தத்தினால் பிரதேச மக்களின் மனநிலை பாதிக்கப்படுவதாகவும் சுகாதாரக் கேடு ஏற்படும் எனவும் தெரிவித்து இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.