சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்படும் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உடுவே தம்மாலோக தேரர் நீதிமன்ற முன்னிலையில்..
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்ததாக குற்றஞ் சாட்டப்படும் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு இன்று(20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது.
எவ்வாறாயினும் இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக தேரரை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.