நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் இன்று(07) புறக்கோட்டை பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
அது , பண்டிகை காலத்தில் சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை தொடர்பில் கண்காணிப்பதற்காகும்.
இதன் போது கருத்து தெரிவித்த அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கத்தின் ஊடக பேச்சாளர் ஹேமக பிரனாந்து , பண்டிகை காலத்தில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது என தெரிவித்திருந்தார்.
அதேபோல் , தேவையான அளவு உணவுப் பொருட்கள் தங்களிடம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.