உணவுப் பொருட்களை நேரடியாக கைகளால் தொட்டு விற்பனை செய்வது தடைசெய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து குறித்த தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 3 மாத கால பகுதிகளுக்குள் பொதுமக்கள், பாடசாலை மாணவர்களை தெளிவுப்படுத்துமாறு மாகாண மற்றும் மாவட்ட, பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு துண்டுபிரசுரம் விநியோகிக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் உணவு கட்டுபாட்டு பிரிவின் உதவி பணிப்பாளர் ஜே.கே. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.