உணவுப் பொருட்களை நேரடியாக கைகளால் தொட்டு விநியோகிக்க இன்று(01) முதல் தடை…

(FASTNEWS | COLOMBO)- உணவுப் பொருட்களை நேரடியாக கைகளால் தொட்டு விநியோகிக்க மற்றும் பரிமாற ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு இன்று(01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று(01) முதல் ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் உணவுகளை கையுறை மற்றும் அதற்கான உபகரணங்கள் மூலமே தொட முடியும் எனவும், அதனை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.