கட்டுநாயக்க முதலீட்டு வலய ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் உட்கொண்ட உணவு ஒவ்வாமையால் 56 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்கள் இன்று (19) காலை உட்கொண்ட காலையுணவு இவ்வாறு ஒவ்வாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 30 ஊழியர்கள் ராகம போதனா வைத்தியசாலையிலும் 26 பேர் மினுவாங்கொட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.