கண்டி, ஹாரகம தையல் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பணியாட்கள் 200 பேர் அவசரமாக இன்று(12) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவு ஒவ்வாமையே இதற்குக் காரணம் என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
குறித்த தொழிற்சாலையில் இன்று(12) காலை வழங்கப்பட்ட உணவுப் போசனைக்குப் பின்னரே இவ்வாறான ஒவ்வாமை நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)