அம்பாறை இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக சுமார் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது
வழங்கப்பட்ட பகல் உணவை உட்கொண்டவர்களே உணவு ஒவ்வாமையால் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.