உணவு ஒவ்வாமை காரணமாக 54 சிறுவர்கள் மருத்துவமனையில்…

வட்டவலை பிரதேசத்தில் உள்ள பராமறிப்பு மையத்தில் தங்கி இருந்த 6 முதல் 13 வயதுகளை உடைய சிறுவர்கள் 54 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. .

சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் பின்னர் மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 30 சிறுவர்கள் சிகிச்சையின் பின்னர் வெளியேறியுள்ளதுடன், ஏனையவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.