(FASTNEWS|COLOMBO) – தஜிகிஸ்தான் நாட்டில் கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 14 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த், இஸ்டராவ்ஷான் ஆகிய நகரங்களில் உள்ள சிறைகளில் இருந்து வேறு சிறைகளுக்கு 128 கைதிகளை மாற்றும் பணி நடைபெற்றுள்ளது.
அதற்காக சிறையை விட்டு வெளியே வந்த கைதிகள் 16 பேருக்கு ரொட்டிகள் வழங்கப்பட்டன. அவற்றை சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குள் 16 பேருக்கும் மயக்கம், குமட்டல், வாந்தி ஆகிய உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
வேறு சிறைக்குள் வாகனம் நுழைந்தவுடன், 16 கைதிகளுக்கும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. ஆயினும், 14 கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.