உண்ணப்படக் கூடிய திருமண ஆடை

பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள் சிலர் இணைந்து மணமகள் ஆடையொன்றை வடிவமைத்துள்ளனர்

அழகிய இந்த ஆடையை தயாரிப்பதற்கு 300 மணித்தியாலங்கள் மேல் தேவைப்பட்டனவாம்.

ஆனால், எந்தவொரு பெண்ணும் தனது திருமண வைபவத்துக்கு இந்த ஆடையை அணிந்துகொள்ள விரும்பமாட்டார்.

காரணம் இந்த ஆடை முற்றிலும் கேக் மூலம் தயாரிக்கப்பட்டதாகும்.
பாரம்பரியமாக திருமண ஆடைத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் துணி வகைகளை அல்லாமல் வேறு பொருள் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடை இது என்பதை கண்டறிய முடியாத வகையில் இந்த ஆடை உள்ளது.

பல நுணுக்கமான வேலைப்பாடுகளை இது கொண்டுள்ளது.
170 சென்ரிமீற்றர் உயரமான இந்த ஆடை 70 கிலோகிராம் எடையைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விருது வென்ற கேக் வடிவமைப்பாளரான சில்வியா எல்பா, ஈவெட் மார்னெர்ஈ ஓவியர் இலின்கா ரினிக் ஆகியோர் இணைந்து இந்த கேக் ஆடையைத் தயாரித்துள்ளனர்.

16073Untitled-1