பெண்களுக்கு முகத்தில் உதட்டிற்கு மேல் வளரும் முடி ஆண்களின் மீசையை போல் இருப்பதால் பெண்களுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. சிலருக்கு வெளியில் அந்த அளவுக்கு தெரியாதது போல் மெலிதாக தோன்றும் இந்த முடிகள் சிலருக்கு அதிகமாக இருக்கும். இவற்றை சரி செய்ய பல எளிய வழிமுறைகள் உண்டு. இதனை பயன்படுத்தி உதட்டின் மேல் உள்ள முடிகளை முற்றிலும் போக்கலாம். முயற்சித்து பாருங்கள்.
மஞ்சள் மற்றும் பால்:
தேவையான பொருட்கள்:
1 ஸ்பூன் மஞ்சள், 1 ஸ்பூன் பால் அல்லது தண்ணீர்
செய்முறை: மஞ்சளை தண்ணீர் அல்லது பால் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உதட்டின் மேல் தடவி அரை மணி நேரம் அப்படியே விடவும். காய்ந்த பிறகு தண்ணீரால் கழுவவும். ஒரு வாரத்தில் பல முறை இதனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
முட்டை:
தேவையான பொருட்கள்:
1 முட்டை (வெள்ளை கரு மட்டும்), 1 ஸ்பூன் கார்ன் மாவு, 1 ஸ்பூன் சர்க்கரை.
செய்முறை: முட்டையின் வெள்ளை கருவை, கார்ன் மாவு மற்றும் சர்க்கரையுடன் சேர்க்கவும் . பேஸ்ட் பதம் வரும் வரை நன்றாக கலக்கவும். உதட்டின் மேல் பகுதியில் இதனை தடவவும். 30 நிமிடம் கழித்து காய்ந்ததும் அந்த கலவையை உரித்து எடுக்கவும். ஒரு வாரத்தில் 2 முறை இதனை செய்யலாம் . ஒரு மாதத்திற்குள் நல்ல பலன் கிடைக்கும்.
சர்க்கரை:
தேவையான பொருட்கள்:
2 ஸ்பூன் சர்க்கரை, 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு சிறு மெல்லிய துணி
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு இலேசாக சூடாக்கவும். பின்பு அதில் எலுமிச்சை சாறை சேர்த்து, ஓரளவுக்கு திடமாக ஆகும்வரை கிளறவும். பின்பு அந்த கலவையை குளிர செய்து, உதட்டின் மேல் பகுதியில் தடவவும். /மெல்லிய துணியை அந்த கலவையின் மேல் போட்டு சூழல் வடிவில் தேய்க்கவும். அந்த துணியை, முடி வளர்ச்சி இருக்கும் திசையில் வேகமாக பிடித்து இழுக்கவும். இதனால் முடி வளர்ச்சி தடுக்கப்படும்
கோதுமை மாவு:
தேவையான பொருட்கள்:
1 ஸ்பூன் கோதுமை மாவு, 1 ஸ்பூன் பால், 1 சிட்டிகை மஞ்சள் தூள்
செய்முறை: எல்லா பொருட்களையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இதனை உதட்டின் மேல் தடவி நன்றாக காய விடவும். காய்ந்தவுடன் அதனை உரித்து எடுக்கவும். தண்ணீரால் முகத்தை கழுவவும். 3 நாட்களுக்கு ஒரு முறை இதனை செய்யலாம்
எலுமிச்சை:
எலுமிச்சை 1 ஸ்பூன், சர்க்கரை
செய்முறை: ஒரு எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி அதன் சதை பகுதியில் சிறிது சர்க்கரையை தூவி உதட்டின் மேல் புறத்தில் எலுமிச்சையை தேய்க்கவும். தொடர்ந்து 10 நிமிடங்கள் செய்யவும். பின்பு நீரால் முகத்தை கழுவவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதனை செய்யவும். தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் உதட்டின் மேல் முடிகள் உதிர்ந்து உங்கள் அழகு மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். முயற்சித்து பாருங்கள்.